Loading . . .




பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது ஆபத்துகளை ஏற்படுத்தும் என அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 வங்கிகளில் 4 வங்கிகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12ஆக குறைந்தது. தற்போது மீண்டும் வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து செய்திகள் வௌியாகியுள்ளன.இந்நிலையில் கவுஹாத்தியில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் செயலாளர் ரூபம் ராய் கூறும்போது, “வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நாளிலிருந்து விவசாயம், கல்வி, சுகாதாரம், குறு, சிறு தொழில்கள், உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு முக்கிய துறைகளுக்கு நிதியுதவி, கடனுதவி வழங்கி வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் தூண்களாக உள்ளன. வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் அதன் அடிப்படை பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News