அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீடு செய்வது இனி ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசுக்கு சொந்தமான மின்னணு ஊடகங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப தளம் மூலமாக டிஜிட்டல் ஒளிபரப்பு நேர ரசீதுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததின் மூலம் ஆணையம் இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. இனி தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒளிபரப்பு நேர ரசீதுகளை வாங்குவதற்காக தேர்தல் ஆணையம் அல்லது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
0 Comments