அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சரும் அவரது மனைவியும் உச்சந்திமன்றத்தில் இரண்டு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
செந்தில் பாவாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், 'கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு சட்டவிரோதமானது. மேலும், சட்டத்திற்கும் முரணானது. ஆகவே, இதை உறுதிப்படுத்தும் கேள்விக்குரிய தீர்ப்புகள் ரத்து செய்யப்பட
வேண்டும். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க காவல் துறை அதிகாரிகளாக இல்லாத அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு உரிமை உள்ளதா என்ற சட்டக் கேள்வி எழுந்துள்ளது. மேலும், கைது செய்வதற்கான அதிகாரம் மற்றும் கட்டாயமாக விசாரிக்கும் அதிகாரம் ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்கும் உரிமையை உள்ளடக்கியதா என்பதையும் அறிய வேண்டியுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பரவாஜியின் கைது நடவடிக்கையை உறுதி செய்ததுடன், போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பண மோசடி வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தற்போது தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்கிறார்.
செந்தில் பாலாஜியின்
மனைவி தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், 'செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவர் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. கைது செய்ய அதிகாரம் உள்ளபோது காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரமும் அமலாக்கத் துறைக்கு உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்ககத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்" என்று
தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து, தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21} விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் சட்டப் பிரிவு 19ன் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று
அமலாக்கத் துறை வாதிட்டது. சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தை பொறுத்தவரை நீதிமன்ற காவல் என்பது இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
இருதரப்பு வாதங்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாவாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு. வழக்கை வரும் ஜூலை 26க்கு ஒத்தி வைத்தது.
மேலும் ஜூனல 25 ஆம் தேதி வரை வேறு எந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 Comments