Loading . . .




திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை: மசோதாவில் பரிந்துரை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, திரைப்பட தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் அபராதம் விதிக்க ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ஐ மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில், திரைப்படங்களை

திருட்டுத்தனமாகப் பதிவு செய்வதற்கு தடை விதிக்கும் 6ஏஏ பிரிவு, அவ்வாறு படம்பிடிக்கப்பட்ட திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வெளியிடத் தடை விதிக்கும் (6ஏபி) ஆகிய

புதிய பிரிவுகளை ஒளிப்பதிவு சட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவுகளை மீறி, திரைப்படங்களின் திருட்டுப்

பிரதிகளை தயாரிப்போருக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக திரைப்படத்தின் தயாரிப்புச்

செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி திரைப்படங்களுக்கு 'யுஏ'சான்றிதழ் வழங்கும்போது,

அதை வயதுவாரியாக, அதாவது 'யுஏ7+', 'யுஏ13+' மற்றும் 'யுஏ16+' என 3 பிரிவுகளாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News