எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வர கைகூப்பிக் கேட்கிறேன்: அனுராக் தாக்குர்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மணிப்பூர் வன்முறை குறித்து
நாடாளுமன்றத்தில் விவாதம்
நடத்த வருமாறு எதிர்க்கட்சிகளை
கைகூப்பி கேட்டுக் கொள்வதாக
மத்திய அமைச்சர் அனுராக்
தாக்குர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை காரணமாக
எதிர்க்கட்சிகள் தொடர்
முழக்கங்களை எழுப்பியதால்
நாடாளுமன்றம் கடந்த இரு
தினங்களாக முடங்கின.
மணிப்பூர் விவகாரத்தில்
பிரதமர் பதிலளிக்க வேண்டும்
எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில்
வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூர்
வன்முறை குறித்து
நாடாளுமன்றத்தில் விவாதம்
நடத்த வருமாறு எதிர்க்கட்சிகளை
கைகூப்பி கேட்டுக் கொள்வதாக
மத்திய அமைச்சர் அனுராக்
தாக்குர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எல்ஜிஎம்:
சிறப்புத் தோற்றத்தில் தோனி?
இது தொடர்பாக அவர்
கூறியதாவது: மணிப்பூர்
பெண்களுக்கு எதிரான
வன்முறை சம்பவத்தை
எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்
கூடாது. பெண்களுக்கு எதிரான
கொடுமைகள் மிகுந்த வலியை
கொடுக்கின்றது. மணிப்பூர்
மாநிலம் மட்டுமில்லாது
எந்த மாநிலத்தில் இந்த
சம்பவம் நடந்தாலும்
அது கவலைக்குரியதே.
இதுபோன்ற வன்முறைகளை
கட்டுப்படுத்துவது மாநில
அரசின் கடமையாகும்.
ராஜஸ்தான், பிகார், மேற்கு
வங்கம் மற்றும் மணிப்பூர்
மாநிலங்களில் பெண்களுக்கு
எதிராக நிகழ்த்தப்படும்
வன்கொடுமைகள்
குறித்து அரசு ஆலோசித்து
வருகிறது. எதிர்க்கட்சிகள்
விவாதத்திலிருந்து
விலகி செல்லாமல் அதில்
பங்கேற்குமாறு கைகூப்பிக்
கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதற்கிடையில், மணிப்பூர்
விவகாரம் தொடர்பாக
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
நாளை நாடாளுமன்றத்தில்
போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
0 Comments