கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது - வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிறிய அளவில் கடன் பெற்றவர்கள், அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு கூறியதாவது:- கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற வகையிலான நடவடிக்கைகளை சில வங்கிகள் எடுப்பதாக புகார்கள் வருகின்றன.
கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்சினையை மனிதாபிமானத்துடனும், உணர்வுபூர்வமாகவும் அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளது என்று அவர் கூறினார்.
0 Comments