Loading . . .




மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூர் நிலவரம் குறித்து
விவாதிக்காமல் மசோதா குறித்த
விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு
தெரிவித்து மாநிலங்களவையில்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற மழைக்கால
கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20
தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடர் தொடங்கியது
முதலே மணிப்பூர் விவகாரம்
குறித்து விவாதிக்கக்கோரி இரு
அவைகளிலும் எதிர்க்கட்சிகள்
அமளியில் ஈடுபட்டு வருவதால்
தொடர்ந்து நான்காவது நாளாக
இன்றும் இரு அவைகளும்
முடங்கியுள்ளன.
இந்நிலையில் மாநிலங்களவையில்
இன்று பிற்பகல் மணிப்பூர் விவகாரம்
குறித்து விவாதிக்க வேண்டும்
என்று கோரி காங்கிரஸ் கட்சியின்
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பேசிய நிலையில் அவரது மைக்
அணைக்கப்பட்டுள்ளது. மேலும்
மசோதாக்கள் மீது விவாதம்
தொடங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில்
இருந்து வெளிநடப்பு செய்தன.
இதையும் படிக்க | மத்திய அரசுக்கு
எதிராக நம்பிக்கையில்லாத்
தீர்மானம்: எதிர்க்கட்சிகள் முடிவு?

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News