Loading . . .




நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடையில் எதிர்க்கட்சியினர் வருகை!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தில்லி: மணிப்பூர் விவகாரத்தை

கண்டித்து நாடாளுமன்றத்தின்

இரு அவைகளிலும் 'இந்தியா'

கூட்டணியின் எம்.பி.க்கள் கருப்பு

உடை அணிந்து வந்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால

கூட்டத்தொடர் கடந்த வாரம்

தொடங்கியது. எனினும், 5 நாள்களாக

மணிப்பூர் விவகாரம் குறித்து இரு

அவைகளிலும் பிரதமர் நரேந்திர

மோடி விளக்கம் அளிக்க வேண்டும்

என்று எதிர்க்கட்சியினர் அமளியில்

ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நாடாளுமன்ற அலுவல்கள்

பாதிக்கப்பட்டு இரு அவைகளும்

முடங்கியுள்ளன.

இந்நிலையில், மணிப்பூர்

விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

நாடாளுமன்றத்தின் இரு

அவைகளிலும் 'இந்தியா' கூட்டணி

எம்.பி.க்கள் கருப்பு நிற உடை

அணிந்து வந்துள்ளனர்.

முன்னதாக, மாநிலங்களவை

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன

கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா

கூட்டணி கட்சியினர் ஆலோசனை

மேற்கொண்டனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News