Loading . . .




ஜூலை 29ல் மணிப்பூர் செல்கிறது இந்தியா கூட்டணி!

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மணிப்பூர் நிலவரம் குறித்து

அறிய 'இந்தியா' கூட்டணி வருகிற

ஜூலை 29, 30 தேதிகளில் அங்கு

செல்லவிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி

சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து

வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து

குகி பழங்குடியின மக்கள் மே 3ல்

நடத்திய பேரணியில் வன்முறை

ஏற்பட்டதையடுத்து மணிப்பூரில்

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக

கலவரம் நீடித்து வருகிறது.

அதிலும் அங்கு சமீபத்தில் குகி

பழங்குடியின பெண்களை

நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக

கொண்டு சென்ற சம்பவம்,

மேலும் அங்கு பெண்களுக்கு

எதிராக நடைபெறும் சம்பவங்கள்

பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதில் மத்திய அரசு தலையிட்டு

தீர்வு காண வேண்டும், பிரதமர்

மோடி இதுகுறித்து விளக்கமளிக்க

வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்

தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய

அரசு தயக்கம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து

எதிர்க்கட்சிகள் அமளியில்

ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி

வருகிற ஜூலை 29, 30 தேதிகளில்

மணிப்பூர் செல்லவிருப்பதாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த

அனைத்து எம்.பி.க்களும் மணிப்பூர்

செல்ல திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள்

தலைவர் ராகுல் காந்தி, பல

எதிர்ப்புகளுக்கு மத்தியில் மணிப்பூர்

சென்று முகாம்களில் பாதிக்கப்பட்ட

மக்களை சந்தித்துப் பேசியது

குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க மணிப்பூரில்

நடப்பது என்ன?


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News