Loading . . .




மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது 'இண்டியா' எம்.பி.க்கள் குழு: கனிமொழி, திருமாவளவன் உள்பட 20 பேர் பயணம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்காததால், அவரை விளக்கம் அளிக்க வலியுறுத்தும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் எப்போது எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசித்து அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News