ரஷ்யாவின் எச்சரிக்கையால் கருங்கடலில் மீண்டும் போர் பதற்றம்உக்ரைனில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் சமையெல் எண்ணெய், தானியங்கள் விலை உயர வாய்ப்பு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ஜூலை 29: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் துவங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கருங்கடல் பகுதியில் இருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் இதே காரணம் என பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் துறைமுகங்களில் பல மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடந்து தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.நா. சபையின் சார்பாக ரஷ்யா உக்ரைன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை அடுத்து ரஷ்யா தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தது. உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானிய ஏற்றுமதி துவங்கியது. இதன் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஒர் அளவு குறைந்தது.
இதனிடையே ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என கூறப்படுகிறது. உலக நாடுகள் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்தது. உலக நாடுகள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கருங்கடல் வழியாக தானியம் ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் நிறுத்தப்படும். உக்ரைன் தானிய ஏற்றுமதிகளை செய்யமுடியநிலை வரும் என ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் சமையல் எண்ணெய், தானிய வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து வணிகர்கள் கூறியதாவது:
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற போரின் காரணமாக உலக அளவில் எண்ணெய் வித்துகள், தானியங்கள் போன்றவற்றின் தட்டுப்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக விலை உயர்வும் ஏற்பட்டது. உக்ரைன் தானிய ஏற்றுமதியை துவங்கியதும் தானியம் உள்ளிட்டவைகளின் விலை குறைந்தது. ஆனால் மீண்டும் தீவிரமாகம் போர் பதற்றம் காரணமாக, கருங்கடல் வழியாக உக்ரைன் ஏற்றுமதிகளை தொடர முடியவில்லை என்றால் மீண்டும் சமையல் எண்ணெய், தானியங்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கான முன்னெற்பாடுகளை எடுத்து விலை உயராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற போரின் காரணமாக சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. ரூ.120ல் இருந்து ரூ.200 வரை உயர்ந்து அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே போல் தானிய வகைகளின் விலையும் உயர்ந்தது. அதன் பின் சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளின் விலை குறைந்தது. எனினும் விலைவாசி உயர்வினால் மிடில் கிளாஸ் மற்றும் ஏழை, எளிய குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவையில் ரங்கே கவுடர் வீதி, தயாகி குமரன் வீதி, கருப்ப கவுண்டர் வீதி போன்றவைகள் தானியங்களுக்கு மொத்த மார்கெட்டாகவும், சில்லறை விற்பனைக்கும் பெயர் போனதாகும். கோவை மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களும், கேரளா மாநில வியாபாரிகளும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். கடந்த சில மாதங்களாகவே விலை வாசி உயர்வு காரணமாக காரணமாக கோவை மார்கெட்டுகளில் விற்பனை குறைந்துள்ளது. மேற்கொண்டு விலை உயர்ந்தால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கும் என கூறப்படுகிறது. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தி, மேற்கொண்டு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments