Loading . . .




மணிப்பூர் பிரச்சினைக் குறித்து விவாதிக்க வேண்டும்- பாராளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மணிப்பூர் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்றேன். அப்போது வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன், அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. 'ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்களை பாதுகாக்க தவறிவிட்டது' என்பதே இருதரப்பிலும் பாதிகப்பட்டவர்களின் பொதுக்கருத்தாக உள்ளது. இந்த வன்முறையால் அங்கே இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய சூழ்நிலையிலும் அங்கே வன்முறை தொடர்வது தான் மிகக்கொடுமை. மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தையும் அங்கே நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு நாம் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றியமையாதது எனக் கருதுகிறேன். நாடாளுமன்றத்தில் மற்ற வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன். முறையான தீர்வுகளை காண நாம் கவனம் செலுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்கான மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிப்பதற்கான பணிகளை நாம் ஆற்ற முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News