மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தி: மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம்..!!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது? மணிப்பூர் அரசு செயலிழந்த நிலையில் உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் 2 மாதங்களாக அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாகத் தெரியவில்லை. முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது; கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
0 Comments