Loading . . .




அமித் ஷா பேச்சை கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல: முதலைமச்சர் எச்சரிக்கை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் என்று முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை. அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுடில்லியில், அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழுவின், 38வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது, உலகளவில் ஹிந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் நரேந்திர மோடி பிரபலப்படுத்தி வருகிறார். உள்ளூர் மொழிகளுக்கு ஹிந்தி போட்டியில்லை.அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும். மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை, 10 மொழிகளில் துவங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. விரைவில் இந்தப் படிப்புகள் நாட்டின் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும். அதிகாரப்பூர்வ மொழியை ஏற்றுக்கொள்வது, சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரக்கூடாது. நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கம் ஆகியவற்றிலிருந்து வர வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை கொடுக்கும் போது தான், அதிகாரப்பூர்வ மொழி ஏற்றுக் கொள்ளப்படும் என்று அமிதாஷா கூறினர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News