Loading . . .




ராகுலைக் கண்டு பாஜக பயப்படுகிறதா?முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை கண்டு

பாஜக பயப்படுகிா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் .அவர் சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவியை மக்களவையில் தகுதிநீக்கம் செய்தனர். இந்த நிலையில், அந்தத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்கவில்லை. பதவி நீக்கத்தின்போது காட்டிய அவசரத்தை, பதவியை வழங்குவதில் ஏன் காட்டவில்லை? நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிற? எனப் பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News