கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில்
தமிழக முன்னாள் முதல்வர்
கருணாநிதியின் படத்துக்கு
மலர்தூவி காங்கிரஸ் மூத்த
தலைவர்கள் சோனியா காந்தி
மற்றும் ராகுல் காந்தி மரியாதை
செலுத்தினர்.
முன்னாள் திமுக தலைவரும்,
முதல்வருமான கருணாநிதியின்
5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று
அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு
அரசியல் கட்சித் தலைவர்கள்
கருணாநிதியின் புகைப்படத்துக்கு
மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற
வளாகத்தில் உள்ள திமுக
எம்.பி.க்களின் அறையில்
வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின்
புகைப்படத்துக்கு சோனியா காந்தி
மற்றும் ராகுல் காந்தி மலர்தூவி
அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில், திமுக
மாநிலங்களவை தலைவர் திருச்சி
சிவா, திமுக மற்றும் காங்கிரஸின்
எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
0 Comments