மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்..!!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக இன மோதல்கள் தொடருகின்றன. மைத்தேயி-குக்கி இன குழுக்களிடையேயான இம்மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் இனமோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த முறை வழக்கு விசாரணையின்போது, மணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம் அம்மாநில டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மணிப்பூர் டிஜிபி இன்று நேரில் ஆஜரானார். அச்சமயம் மணிப்பூரில் மறு குடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம், மறுவாழ்வு உதவி வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கண்காணிக்கும்.ஓய்வுபெற்ற நீதிபதிகள் கீதா மிட்டல், ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி தத்தாத்ரேய பட்சால்கிகரும் குழுவில் இடம்பெறுவார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments