Loading . . .




நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி வருகின்றன. குறிப்பாக மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. அதேவேளை, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News