யுபிஎஸ்சி(UPSC) முதன்மைத்
தேர்வுக்கான ஊக்கத்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2023-24 க்கான
பட்ஜெட் உரையில், தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC),
அண்ணா நிர்வாகப் பணியாளர்
கல்லூரியுடன் இணைந்து,
மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் குடிமைப்
பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று
வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு
சிறந்த பயிற்சி மற்றும் இதர
தேவையான வசதிகளைச்செய்து
உதவும் வகையில் ஒரு
திட்டத்தை செயல்படுத்தும் என்று
அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி யுபிஎஸ்சி
குடிமைப் பணிகள் முதல்நிலைத்
தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு
ரூ.25,000 ஊக்கத்தொகையாக
வழங்கப்படும். இத்திட்டத்தின்
தொடக்கமாக, 07.08.2023,
அன்று நடைபெற்ற நான்
முதல்வன் திட்டத்தின் ஓராண்டு
வெற்றி விழாவில் தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி
பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10
மாணவர்களுக்கு முதன்மைத்
தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள
ஏதுவாக தலா ரூ.25,000 காசோலைகள்
வழங்கி யுபிஎஸ்சி முதன்மைத்
தேர்வுக்கான ஊக்கத்தொகைத்
திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு
திறன் மேம்பாட்டுக் கழகத்தின்
கீழ் இயங்கிவரும் நான் முதல்வன்
போட்டித் தேர்வுகள் பிரிவின்
வாயிலாக 2023- ஆம் ஆண்டுக்கான
28.05.2023 அன்று நடைபெற்ற
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில்
தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த
அனைத்து மாணவர்களுக்கும்
முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி
மேற்கொள்ள ஏதுவாக ரூ. 25,000
ஊக்கத்தொகை நேரடியாக
மாணவர்களின் வங்கிக் கணக்கில்
செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மக்கள் விரும்பும்
பிரதமராக மோடி இருக்கிறார்:
மக்களவையில் அமித் ஷா பதில்
This
இந்த ஊக்கத்தொகையைப்
பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலைத்
தேர்வில் தேர்ச்சி பெற்ற
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள்,
https://www.naanmudhalvan.tn
.gov.in என்ற இணையதளத்தில்
கொடுக்கப்பட்டிருக்கும்
அறிவிக்கையைப் படித்து பார்த்து,
11.08.2023 முதல் 22.08.2023
வரை விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments