காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து
வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்குப் பதிலளிக்க உள்ளார்.
0 Comments