இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) மேலாண் இயக்குநராக ஆா். துரைசுவாமியை மத்திய அரசு திங்கள்கிழமை நியமித்தது.
அரசு பொதுத் துறை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான இயக்குநர் உள்ளிட்ட தலைவர்கள் நியமனம், முன்னாள் செயலர் பானு பிரதாப் சாமா தலைமையிலான நிதி சேவைகள் நிறுவன அமைப்பு (எஃப்எஸ்ஐபி), எல்ஐசியின் மேலாண் இயக்குநராக துரைசுவாமியை நியமிக்க கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
தற்போது, இவா் மும்பையில் உள்ள எல்ஐசியின் மத்திய அலுவலகத்தில் நிா்வாக இயக்குநராகப் பதவி வகித்து வருகிறாா்.
செப்டம் 1-ஆம் தேதி மேலாண் இயக்குநராகப் பதவியேற்கும் துரைசுவாமி, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அந்தப் பதவியில் தொடா்வாா்.
0 Comments