இனி அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை – மத்திய அரசு ஒப்புதல்?
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
நாட்டில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வேலை செய்கின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து வங்கி ஊழியர்களும் மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின்படி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
0 Comments