Loading . . .




நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் உள்ள ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்ற பெயர் இன்று (ஆக.,16) முதல் ‘பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டின் முதல் மற்றும் நீண்ட காலம் பிரதமராக இருந்த நேருவின் பெயரை மாற்றியது பிரதமர் மோடியின் பயத்தை காட்டுகிறது. அவர் நேருவையும், நேருவின் பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது மற்றும் அழிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் உள்ளார்.

இது அற்பத்தனமானது மற்றும் கோபத்தின் வெளிப்பாடு. ஆனால் சுதந்திர போராட்டத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்பையும், இந்திய தேசிய அரசின் ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல் சார்ந்த அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகளையும் ஒருபோதும் புறம்தள்ளிவிட முடியாது. இவையனைத்தும் இப்போது மோடி மற்றும் அவருக்கு பறைசாட்டுபவர்களால் தாக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வரலாற்றை மாற்ற முடியாது

உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘இன்னும் வேறு என்ன மிச்சம் இருக்கிறது? கட்டடத்தின் பெயரை மாற்றலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பிடப்படும் நேருவின் பெயரை மாற்ற முடியாது. மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சாவர்க்கர் போன்றோர் படைத்த வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது. அவர்களைப் போன்ற வரலாற்றையும் உங்களால் உருவாக்க முடியாது என்பதால் நீங்கள் (பா.ஜ.,) பெயர்களை மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்’ என விமர்சித்துள்ளார்.


1 Comments

கண்டிக்கத்தக்கது

Palanisamy R

2 years ago

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News