Loading . . .




அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: நேருவின் செயல்கள் தான் அடையாளம், பெயர் அல்ல- ராகுல்காந்தி கருத்து

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

அருங்காட்சியகம் பெயர் மாற்றம்: நேருவின் செயல்கள் தான் அடையாளம், பெயர் அல்ல- ராகுல்காந்தி கருத்து

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் பங்களிப்பை பிரதமர் மோடி பறித்துவிட முடியாது. இது சிறுப் பிள்ளைதனமானது என்று காங்கிரஸ் சாடி இருந்தது. இந்நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் அவர் இதுதொடர்பாக கூறும்போது, "நேருவின் செயல்கள் தான் அவரது அடையாளம். அவரது பெயர் அல்ல" என்றார்


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News