Loading . . .




கொல்கத்தா மேயர் மருமகன் காங்கிரசில் இணைந்தார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கீம் மருமகன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிர்ஹாத் ஹக்கீம். இவர் கொல்கத்தா மேயராக உள்ளார். மேலும் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமானவர். இவரது மருமகன் யாசீர் ஹைதர். திரிணாமுல் இளைஞர் அணி தலைவராக இருந்தார். அவரது பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தியா கூட்டணியில் திரிணாமுல் இணைந்துள்ள நிலையில் அந்த கட்சியின் முக்கியத்தலைவரின் மருமகன் யாசீர் காங்கிரசில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News