Loading . . .




செப்.3-ல் தென்காசியில் இருந்து 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை: 27-ம் தேதி கோவையில் நிறைவு

The Forecast 2 years ago அரசியல் செய்திகள்



அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-ல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தின்போது 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தற்போது, திருநெல்வேலியில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை அங்கு தனது முதல் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார் அதன்பிறகு ஓய்வெடுக்கும் அண்ணாமலை, அடுத்தக்கட்டமாக செப்.3-ம் தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார். அதன்படி, 3-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி, தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 27-ம் தேதி நிறைவு செய்கிறார்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News