Loading . . .




ஜி20 மாநாடு - 3 நாட்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் வைத்து பிரமாண்டமாக மாநாட்டை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 8 தொடங்கி 10-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு மட்டும் மத்திய அரசு அலுவலகங்கள் மூடப்படுகின்றன. இந்த தகவல் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News