Loading . . .




அதானி குடும்ப ரகசிய முதலீடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை- ராகுல் காந்தி வலியுறுத்தல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்



அதானி குடும்ப ரகசிய முதலீடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ரகசிய முதலீடு பிரபல தொழில் அதிபர் அதானி குழுமத்தில் அவர்களின் குடும்பத்தினரே வெளிநாட்டில் இருந்து ரகசியமாக பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுதொடர்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:-


நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை ஜி20 மாநாடு நாட்டில் நடந்து வரும் நிலையில், அதானி குழும முறைகேடுகள் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. பிரதமருக்கும், அதானிக்கும் உள்ள தொடர்பை பத்திரிகைகள் வெளிப்படுத்தியுள்ளன. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது?, அதானி பணமா அல்லது வேறு யாருடையதா?. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பணம் தொடர்பாக விரிவான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை.

யாருடைய பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். மோடி ஏன் மவுனமாக உள்ளார். இதை ஏன் அவர் விசாரிக்காமல் உள்ளார். அதானி விவகாரத்தில் உலகின் பிரபலமான பத்திரிகை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News