Loading . . .




விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்று கொள்முதல்: திருச்சியில் இ-நாம் திட்டத்தில் புதிய முறை

The Forecast 2 years ago திருச்சி

தமிழகத்தில் விவசாயிகள் நலன் கருதி அவர்களின் தோட்டத்தில் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியிலும் 5 நேரடி கொள்முதல் நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெற திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ""விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தை (இ-நாம்) மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு அதிக விலையை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இணையம் மூலம்.

தற்போது தமிழகத்தில் 157 ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, இலால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் தரையூர் ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் E-NAM திட்டம் செயல்படுகிறது.

e-NAM முறையில், அனைத்து ஏல நடைமுறைகளும் இணையதளம் மூலம் மின்னணு முறையில் செய்யப்படுகின்றன, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் மற்றும் பிற ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களின் வர்த்தகர்களும் பங்கேற்று ஏலங்களைக் கோரலாம். அந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் (FARM GATE SALES) என்ற முறை அரசால் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைத்திடும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம் அல்லது தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருவதுடன் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்

0 Comments

Post your comment here

திருச்சி Relateted News