மோசடியான வழியில் செய்யப்படும் மதமாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
மோசடியான வழியில் செய்யப்படும் மதமாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மோசடியான வழியில் செய்யப்படும் மதமாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கா்நாடகத்தைச் சோ்ந்த ஜெரோம் ஆன்டோ என்பவா் சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பணப் பலன்கள் மற்றும் பரிசுப் பொருள்களைக் கொடுத்தும் ஏமாற்றி மோசடி வழியில் மதமாற்றம் செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இது, அரசியல் சாசனம் வழங்கும் சமத்துவத்துக்கான உரிமை (பிரிவு 14), தனிமனித மற்றும் வாழ்வதற்கான சுதந்திரம் (பிரிவு 21), மதத்தை பரப்புதல் மற்றும் பின்பற்றுவதில் உள்ள சுதந்திரம் (பிரிவு 25) ஆகியப் பிரிவுகளை மீறும் செயலாகும். இதுபோன்ற மோசடி மதமாற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அதோடு, இதுபோன்ற மோசடி மதமாற்ற முயற்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் அதுதொடா்பான ஓா் அறிக்கையையும், சட்ட மசோதாவையும் தயாா் செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஹிந்துக்களும், சிறுபான்மையினரும் குறிவைக்கப்பட்டு இதுபோன்ற மோசடி வழியில் மதமாற்றம் செய்யப்படுகின்றனா்’ என்று குறிப்பிட்டாா்.இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்? இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்ன மாதிரியான மனு இது? இந்த நடைமுறையில் யாராவது நேரடியாக பாதிக்கப்பட்டு, அவா்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகும்போதுதான் நீதிமன்றம் தலையிட முடியும். பொதுநல மனு என்பது ஒவ்வொருவருக்கும் ஓா் கருவியாக மாறிவிட்டது. நீதிமன்றம் என்பது அரசுக்கு அறிவுரை வழங்கும் அமைப்பு அல்ல’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
0 Comments