Loading . . .




மொபைலில் இருந்து கியூ.ஆர். ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.. புதிய வகை யு.பி.ஐ. ஏ.டி.எம். அறிமுகம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ளும் வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில் டெபிட் கார்டு எதுவும் இன்றி ஏ.டி.எம்.-இல் இருந்து பணம் எடுக்கும் வழிமுறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அறிமுகமாகி இருக்கும் புதிய வகை ஏ.டி.எம். ஆனது "யு.பி.ஐ. ஏ.டி.எம்." என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை ஏ.டி.எம். கொண்டு யு.பி.ஐ. மூலம் எளிதில் பணம் எடுக்க முடியும்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News