Loading . . .




6 மாநிலங்களில் 7 தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி - 4 தொகுதிகளை கைப்பற்றிய 'இந்தியா' கூட்டணி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றியது.

உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், திரிபுரா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் காலியான 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

அதில் பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி ஈட்டியது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News