டிஜிட்டல் கட்டமைப்பில் இந்தியா சாதனை; 6 ஆண்டுகளில் பெரும் மாற்றம் - ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலக வங்கி அறிக்கை
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
டிஜிட்டல் கட்டமைப்பில் 47 ஆண்டு கால பயணத்தை வெறும் 6 ஆண்டுகளில் செய்து காட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது’’ என்று உலக வங்கி பாராட்டி உள்ளது.
ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகள் தொடர்பாக மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி நேற்று வெளியிட்டுள்ளது.
இந்திய அரசில் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மக்களுக்கு அரசின் நிதிச் சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்ய, ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் போன்கள் இல்லாமல் போயிருந்தால் 47 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இந்தியா இந்த வளர்ச்சியை வெறும் 6 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளது.
0 Comments