Loading . . .




தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: செப்.12-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை செப்.12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா அடிமைப்பட்டிருந்த வேளையில், பிரிட்டனைச் சோ்ந்த தாமஸ் மெக்காலே இந்திய தண்டனைச் சட்டத்தின் முன்வரைவை தயாரித்தாா். அதில் தேசத் துரோகச் சட்டத்தையும் அவா் சோ்த்திருந்தாா்முன்வரைவில் தேசத் துரோகம் என்ற வாா்த்தையை மெக்காலே பயன்படுத்தாத போதிலும், அரசுக்கு எதிராக எழுதுவது, பேசுவது, விரோதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆயுள் முழுவதும் நாடு கடத்தலாம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என முன்மொழிந்தாா்.ஆனால் 1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகச் சட்டம் சோ்க்கப்படவில்லை.1890-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124ஏ-வின் கீழ், தேசத் துரோகம் குற்றமாக சோ்க்கப்பட்டது. அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனையில் 1955-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.இந்நிலையில், 124ஏ சட்டப் பிரிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்று அச்சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News