Loading . . .




துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் கவர்னர் ஆர்.என். ரவி சந்திப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். அதன்படி, டெல்லியில் இன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளார். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் சில சட்ட நிபுணர்களையும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News