Loading . . .




அடுத்த மாதம் அமலாக இருந்த நிலையில் மாற்றம்; கார்களில் 6 ஏர்பேக் கட்டாயமில்லை: நிதின் கட்கரி திடீர் தகவல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கார்களில் 6 ஏர்பேக் பொருத்த வேண்டும் என்ற விதியை அரசு கட்டாயமாக்காது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, உயிரிழப்பைத் தடுக்க கார்களில் காற்றுப் பைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காற்று நிரப்பப்பட்ட பைகளான இந்த ஏர் பேக்குகள், விபத்து ஏற்பட்டால், பயணிகளின் பாதுகாப்பிற்காக உடனடியாக பயன்படுத்தப்படுகின்றன.

இதன்படி, ஜூலை 1, 2019 முதல், காரின் ஓட்டுநர் இருக்கையில் காற்றுப் பையை வைத்திருப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதையடுத்து, ஏப்ரல் 1, 2021 முதல் டிரைவரின் முன் இருக்கையில் ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.இந்நிலையில், பாதுகாப்பை அதிகரிக்க கார்களின் பின் இருக்கையில் மொத்தம் 6 ஏர்பேக்குகள் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கார்களில் 6 ஏர்பேக் பொருத்தும் நடைமுறை கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி அமல்படுத்தப்பட இருந்தது.

பின்னர், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது, இந்த நடைமுறை ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறியது. இதில், அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நிதின் கட்கரி, “கார்களுக்கு 6 ஏர் பேக் கட்டாயம் என்ற விதியை நாங்கள் விரும்பவில்லை.ஏனென்றால், மக்கள் ஏற்கனவே போதுமான உஷாராக உள்ளனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News