Loading . . .




ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் இந்தியாவின் புதிய நீர்மூழ்கி கப்பல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் 'மத்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல், கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் ஆழத்திற்கு 3 ஆய்வாளர்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து, நீடித்து நிலையாக பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ் கூறினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News