உலக பல்கலைகழக தர வரிசை பட்டியலில் 91 இந்திய பல்கலைகழகங்களுக்கு இடம்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
டைம்ஸ் உலக பல்கலைகழக தர வரிசைப்பட்டியலில் 91 இந்திய பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளன. லண்டனை தலைமையிடமாக கொண்ட டைம்ஸ் நாளிதழ் 2024ம் ஆண்டுக்கான உலக அளவிலான உயர் கல்வி நிலையங்களின் தர வரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில் 91 இந்திய பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளன. பெங்களூரு இந்திய அறிவியல் மையம்(ஐஐஎஸ்சி) 250 வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைகழகம், ஜமீயா மிலியா பல்கலைகழகம், மகாத்மா காந்தி பல்கலைகழகம், ஷூலினி மேலாண்மை அறிவியல் மற்றும் பயோதொழில்நுட்ப பல்கலைகழகம் ஆகியவை இந்தியாவின் 2 வது சிறந்த பல்கலைகழகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தர வரிசை பட்டியலில் 501 முதல் 600 வரையிலான இடங்களில் உள்ளன.
கவுகாத்தி மற்றும் தன்பாத்தில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் உலகின் 800 முன்னணி பல்கலைகழக தரவரிசையில் இடம் பிடித்துள்ளன. கோவை, பாரதியார் பல்கலைகழகம் மற்றும் ஜெய்ப்பூர் மாளவியா தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகியவை 601 முதல் 800க்கு உட்பட்ட தரவரிசையில் இடம் பிடித்து உள்ளன. தரவரிசை பட்டியலின் தகுதி நிர்ணயம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து சில சந்தேகங்களை எழுப்பி மும்பை, டெல்லி,கவுகாத்தி,கான்பூர், காரக்பூர், சென்னை உள்ளிட்ட 7 ஐஐடிகள் டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இருந்து கடந்த 2020ல் வெளியேறின.
0 Comments