Loading . . .




பாஜ.,வை தோற்கடிக்க போராட வேண்டும்: காங்.,ற்கு அகிலேஷ் வலியுறுத்தல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

லோக்சபா தேர்தலில் பாஜ., வை தோற்கடிக்க இணைந்து போராட வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரசிற்கு வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று எஸ்சி, எஸ்டி.,யினர் எல்லா துறைகளிலும் பின்தங்கி உள்ளனர். இன்று ஒவ்வொரு சமுதாய மக்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது. இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?. லோக்சபா தேர்தலில் பாஜ., வை தோற்கடிக்க சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அகிலேஷ் கூறினார். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News