Loading . . .




பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு பீகாரில் பி.சி, எம்.பி.சி 63%: பொதுபிரிவினர் 15 சதவீதம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பீகாரில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவினர் 63 % உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அரசு நடந்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசிடம் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால், தலித்துகள், பழங்குடியினரை தவிர மீதி உள்ள சமூகத்தினர் பற்றி கணக்கெடுப்பை நடத்த வாய்ப்பு இல்லை என ஒன்றிய அரசு நிராகரித்தது.

இதையடுத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் அரசின் மேம்பாட்டு ஆணையர் விவேக் சிங் நேற்று வெளியிட்டார். அதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.07 கோடி. அதில், 36 % உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (எம்.பி.சி) மிக பெரிய சமூக பிரிவாக உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) 27.13 % உள்ளனர். ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் 63 % இருக்கின்றனர்.பொது பிரிவினர் 15.52 % ஆகும். பிற்படுத்தப்பட்டோரில் அதிகளவாக யாதவ சமுதாயத்தினர் 14.27 % உள்ளனர்.

தலித்துகள் 19 %, பழங்குடியினர் 1.68 % , பிராமணர் 3.66 % , குர்மி 2.87 % , முசாஹர் 3 % என தெரியவந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 81.99 %, முஸ்லிம்கள் 17.70 %,கிறிஸ்தவர்கள், சீக்கியர், ஜெயின் உள்ளிட்ட மதங்களை சார்ந்தவர்கள் 1 % குறைவாகவே உள்ளனர். முதல்வர் நிதிஷ் வெளியிட்ட அறிக்கையில், மிக பெரிய அளவிலான கணக்கெடுப்பு பணியை முடித்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். சட்டபேரவையில் இடம் பெற்றுள்ள 9 அரசியல் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறும்போது, ‘‘இது முக்கிய வரலாற்று தருணம்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News