பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் கெலாட் அறிவிப்பு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பீகாரை போன்று ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். பீகார் அரசு கடந்த 2ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. முதல்வர் நிதிஷ்குமார் அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் வரவேற்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் இதனை தெரிவித்தார்.
0 Comments