Loading . . .




தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது

S. Shanmuganathan 2 years ago உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது இதையொட்டி மாவட்டந்தோறும் நடைபெற்று வரும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். அதன்படி வருகிற 27-ந்தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதற்காக இன்று (வியாழக்கிழமை) மாலை விருதுநகரில் இருந்து திருநெல்வேலி வருகிறார். அப்போது அவருக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பாலம் அருகே உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா திடலில் நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸடாலின் பங்கேற்கிறார். பின்னர் மாதா மாளிகையில் நடைபெறும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.

0 Comments

Post your comment here

உதயநிதி ஸ்டாலின் Relateted News