Loading . . .




இந்தியாவில் கடும் வெப்ப நாட்கள் அதிகரிப்பு எச்சரிக்கை

The Forecast 1 hour ago வானிலை நிலவரம்.

எனர்ஜி சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் வெளியிட்ட புதிய ஆய்வின்படி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் கடும் வெப்ப நாட்கள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தெரிவிப்பதாவது, ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை அதிக வெப்பம் காணப்படும். அதேபோல், இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் 20 முதல் 40 நாட்கள் வரை அதிக வெப்பமான இரவுகள் பதிவாகலாம். மேலும், கனமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையும் 10 முதல் 30 நாட்கள் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் தாக்கம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கும் எனவும் ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த தகவல்கள், எதிர்கால காலநிலை மாற்றங்களை சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட உதவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.


0 Comments

Post your comment here

வானிலை நிலவரம். Relateted News