பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு NASM-SR ஏவுகணையின் முதல் சால்வோ சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் இருந்து மிகக் குறுகிய நேர இடைவெளியில் இரண்டு ஏவுகணைகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டன. இரண்டும் திட்டமிட்டபடி செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வான்வழியில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சால்வோ முறையில் சோதனை செய்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஏவுகணை அதிகபட்சம் 55 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. மேலும், ஏவப்பட்ட பின் இலக்கை தானாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டதாகும். இது கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
இந்த வெற்றிகரமான சோதனை, நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றத்தை காட்டுகிறது. மேலும், இந்த முன்னேற்றம், எதிர்கால பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments