Loading . . .




பிஎம்-கிசான் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தலா ரூ.6,000 நிதியுதவியை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை : மத்திய அரசு அறிவிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தலா ரூ.6,000 நிதியுதவியை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  2018ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.81 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.  உலகளவில் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் குறித்த மக்களவை கேள்விக்கு மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமா பதிலளித்தார்.  ஆண்டுதோறும் நிதி திரட்டும் திட்டத்தை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News