Loading . . .




தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ஏராளமான தெலுங்கானா மக்கள் முன்னிலையில், மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விக்ரமார்க்க மல்லு துணை முதல்வராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து பதவியேற்றர் .

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் MP ராகுல் காந்தி,  AICC பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் மற்றும் N. உத்தம் குமார் ரெட்டி, டி.ராஜா நரசிம்மா, கே.வெங்கட்ரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு, பி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பி.பிரபாகர், கே.சுரேகா, டி.அனசுயா என்கிற சீதக்கா, டி.நாகேஸ்வர ராவ், ஜே.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட பத்து அமைச்சர்களும்  உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர் தெலுங்கானா மக்களிடம் உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, மக்கள் ஆட்சியில் பங்குதாரர்கள் என்று கூறினார். போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகுதான் தனி மாநிலம் எட்டப்பட்டதாகக் கூறினார். நமது கட்சி தியாகிகளின் கனவுகளை நனவாக்க , இந்திரம்மா ஆட்சி இன்றும், என்றும் தொடரும் என உறுதிமொழி எடுத்துள்ளது என்றார். காங்கிரசுக்கு மக்கள் அளித்துள்ள வாய்ப்பை இப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம் என்றும் ரேவந்த் ரெட்டி உறுதியளித்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News