Loading . . .




மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை : சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலம் முதல்வர் விஷ்ணு தியோ சாய்

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 54 இடங்களில் புதிதாக தேர்ந்தெடுக்ப்பட்ட பாஜக எம்எல்ஏக்களின் முக்கியக் கூட்டம் ராய்ப்பூரில்  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாயை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், பழங்குடி மக்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், பழங்குடியினத்தைத் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துப்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய், 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த 2020 - 2023-ல் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக விஷ்ணு தியோ சாய் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து விஷ்ணு தியோ சாய் கூறுகையில், " பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் வாக்குறுதியின் கீழ் சத்திஸ்கர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக முழுமனதுடன் பாடுபடுவேன். மாநிலத்தின் முதல்வராக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவோம். மக்களுக்கு 18 லட்சம் வீடுகள் வழங்குவதுதான் முதல் வேலை" என்று தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News