ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் பஜன் லால் சர்மா ஜெய்ப்பூரில் பதவியேற்றார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் பஜன் லால் சர்மா ஜெய்ப்பூரில் பதவியேற்றார். சர்மாவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாஜக தலைவர்களான தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் பல மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments