நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழு அமைப்பு- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
காங்கிரஸ் MP ராகுல் காந்தி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
புதுடெல்லயில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ‘நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் பகிரப்படும். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உறுதியான செயல்திட்டத்தை வகுக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற அத்துமீறல் என்பது பாதுகாப்பு குறைபாடுதான் என்றாலும், அதன் பின்னால் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் காரணங்களாக இருக்கின்றன என்று காங்கிரஸ் MP ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
0 Comments