Loading . . .




நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் 18 நாட்களில் 14 அமர்வுகளைக் கொண்டிருந்தது. அதன் விவரம்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் 18 மசோதாக்களும், மாநிலங்களவையில் 17 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் அனுமதியுடன் 3 மசோதாக்களும், மாநிலங்களவையின் அனுமதியுடன் ஒரு மசோதாவும் திரும்பப் பெறப்பட்டன. 19 மசோதாக்கள் இக்கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தொடரின் போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகள் மற்றும் 2020-21-ஆம் ஆண்டுக்கான கூடுதல் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்கள் பின்வருமாறு:

1.வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023.

2.ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா, 2023.

3.ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2023.

4.மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023

5.ரத்து மற்றும் திருத்த மசோதா, 2023

6.டெல்லி சட்டங்களின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா, 2023.

7.தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023

8.பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023.

9.தொலைத்தொடர்பு மசோதா, 2023

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News